கொட்டகையில் துவங்கி கோடீஸ்வரர் ஆன ‘எம்ஆர்எப்’ கே எம் மாமென் மாப்பிள்ளை:

கொட்டகையில் துவங்கி கோடீஸ்வரர் ஆன ‘எம்ஆர்எப்’ கே எம் மாமென் மாப்பிள்ளை:


 வெற்றி ரகசியம் கொட்டகையில் துவங்கி கோடீஸ்வரர் ஆன ‘எம்ஆர்எப்’ கே எம் மாமென் மாப்பிள்ளை: வெற்றி ரகசியம்

உலகில் வளர்ந்து வரும் மற்ற நாடுகளைப் போன்று இந்தியாவில் எஃகு, சிமெண்ட், கனரகப் போக்குவரத்து மற்றும் டயர்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள் வளர்ச்சியடைய முக்கியக் காரணமாக இந்திய தொழிலதிபர்கள் இருந்தனர். வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து எவ்வித பாதுகாப்பும் இல்லாத காலத்திலேயே, அதாவது சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்திலேயே இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் பல்துறை வியாபாரங்களைத் துவங்கி அவற்றை வெற்றிப் பாதையில் இயக்கினர். அவ்வாறான தொழிலதிபர்களில் ஒருவர் தான் கே. எம். மாமென் மாப்பிள்ளை. உண்மையில் எம்ஆர்எப் கே.எம் மாமென் மாப்பிள்ளையின் கனவு திட்டமாக இருந்து இத்தகைய பிரபலம் அடைந்துள்ளது.

கே.எம் மாமென் மாப்பிள்ளை எவ்வாறு தொழில் முனைவோரானார்? அவரது தந்தை வங்கி மற்றும் செய்தித்தாள் நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருந்தார். டிரிவான்கோர் சமஸ்தானம் இவருக்கு இரண்டு ஆண்டுச் சிறை தண்டனை விதித்து அவரது குடும்பச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது குடும்பம் அனைத்தும் இழந்தது. இதனால் தன் தந்தை கைது செய்யப்பட்டது முதல் செயின்ட் தாமஸ் கல்லூரியின் ஹாலில் உறங்கத் தொடங்கினார்..


பலூன் பொம்மை உற்பத்தி


பலூன் பொம்மை உற்பத்தி தன் பட்டப்படிப்பை முடிந்த பிறகு, கே.எம் தன் மனைவி குஞ்சம்மாவுடன் இணைந்து, சிறிய பலூன் பொம்மைகளை உற்பத்தி செய்யத் துவங்கினர். சிறிய கொட்டகையில் பலூன் பொம்மைகளைச் செய்து, கே.எம் அவற்றை ஒரு பையில் எடுத்துச் சென்று தெருக்களில் வைத்து அவற்றை விற்பனை செய்தார். வாடிக்கையாளர்களிடம் வித்தியாசமான எளிய அணுகு முறை அவரின் வெற்றிக்கு வித்திட்டது. நீண்ட காலம் ஒரே தொழில் செய்த பின் வியாபாரத்தைக் கே.எம் முன்நோக்கி அழைத்துச் செல்ல முடிவு செய்தார்

டயர் வியாபாரம்

டயர் வியாபாரம் அவரது உறவினர்களில் ஒருவர் டயர் சார்ந்த வியாபாரம் செய்து வந்தார். அவருக்குத் தேவையான ரப்பர் பொருட்களை வெளிநாட்டு டயர் நிறுவனங்கள் வழங்கி வந்தன. ஸ்டீல் மற்றும் உணவகங்கள் துறையில் ஜாம்ஷெட்ஜீ டாட்டா செய்ததைக் கே.எம். செய்ய நினைத்தார்.

டிரீட் ரப்பர்


டிரீட் ரப்பர் சந்தையில் நல்ல முறையில் லாபத்தை ஈட்ட நினைத்த கே.எம். டிரீட் ரப்பர் தயாரிக்க முடிவு செய்தார். ஏற்கனவே பயன்படுத்திய டயர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் டிரீட் ரப்பர் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

எம்ஆர்எப்



எம்ஆர்எப் மிக விரைவில் டிரீட் ரப்பர்களை உருவாகிற ஒரே இந்திய நிறுவனமாக எம்ஆர்எப் உருவெடுத்தது. இதனால் எம்.ஆர்.எப். பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிட்டது. தரமான பொருட்களை வழங்கி எம்.ஆர்.எப் சந்தையில் 50% பங்குகளுடன் முன்னணி இடத்தைப் பிடித்தது.

போட்டி எம்.ஆர்.எ போட்டி காரணமாகப் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களது வியாபாரத்தைக் கைவிட்டன. சீரான வளர்ச்சிக்குப் பின் மீண்டும் வியாபாரத்தை விரிவுபடுத்த கே.எம் முடிவு செய்தார். இம்முறை அவர் டயர் தயாரிப்பில் கவனம் செலுத்தினார்.

வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அந்தக் காலத்தில் இந்திய ஆட்டோமொபைல் டயர் சந்தையில் டன்லப், ஃபயர்ஸ்டோன் மற்றும் குட் இயர் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

பங்குச் சந்தையில் முதலீடு இவரது டயர் தயாரிப்பு ஆலையை 1961-இல் பிரதமராக இருந்த பண்டிட் நேரு துவங்கி வைத்தார். அதே ஆண்டில் இந்நிறுவனம் ஐபிஒ ஒன்றை வெளியிட்டு பங்கு சந்தையில் வெற்றிப் பெற்றது.

வியாபாரம் சரிவு கே.எம். கூட்டு சேர்ந்த அமெரிக்க நிறுவனத்தின் தொழில்நுட்பம் இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக அமையவில்லை. இதனால் பொருட்கள் வியாபாரம் சரிவடையத் துவங்கியது, இதை வைத்து இந்திய நிறுவனங்களால் டயர்களைத் தயாரிக்க முடியாது என்ற வாக்கில் வெளிநாட்டு நிறுவனங்கள் வதந்திகளைப் பரப்பின.

மத்திய அரசு உதவி எம்.ஆர்.எப் நிலைமை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து விஷயத்தை அரசு அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல எம்ஆர்எப் முடிவு செய்தது. நிலைமையை உணர்ந்த இந்திய அரசு விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இது எம்ஆர்எ போன்ற நிறுவனங்கள் போட்டியிட மறு வாய்ப்பாக அமைந்தது. போட்டியிட போதுமான இடம் கிடைத்ததைத் தொடர்ந்து எம்ஆர்எப் சந்தையில் தனது பங்குகளை அதிகரித்து விளம்பரங்களில் அதிகக் கவனம் செலுத்தியது

விளம்பரம் - அலிக்யூ பத்மஸ்ரீ கே.எம். பிறப்பில் ஓவியர் மற்றும் விளம்பரம் செய்வதில் திறன் கொண்டிருந்தார். தனது பலத்தைச் சரியாகப் பயன்படுத்திப் பல்வேறு விளம்பர நிறுவனங்களை அணுகியது. இறுதியில் இதற்கான வாய்ப்பு அலிக்யூ பத்மஸ்ரீக்கு வழங்கப்பட்டது.

விளம்பர துறையின் தந்தை அலிக்யூ இந்திய விளம்பர துறையின் தந்தையாக அறியப்பட்டார். இதன்பின் 1964-இல் MRF Muscleman பிறந்தது. மசுல்மேன் என்ற வார்த்தை எம்.ஆர்.எப் உருவாக்கிய டயர்களின் உறுதித் தன்மையை விளக்கியது. போட்டியாளர்களை நண்பர்களாக்கும் வித்தை அவருக்குத் தெரிந்திருந்தது. வித்தியாசமான கதைகள் மற்றும் தந்திரங்களைக் கொண்டு மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தி வந்தார்.

முன்னணி நிறுவனங்களின் வீழ்ச்சி தனது விடா முயற்சியால் டன்லப் மற்றும் ஃபயர்ஸ்டோன் நிறுவனங்கள் மட்டுமின்றி உலகின் முன்னணி வெளிநாட்டு பிறாண்டாக விளங்கிய மிக்கலின் நிறுவனத்தையும் வீழ்த்தினார்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இந்திய சந்தையில் தற்போது 24% பங்குகளையும், சர்வதேச அளவில் 12% பங்குகளையும் கொண்டு, எம்.ஆர்.எப் 65க்கும் அதிகமான நாடுகளுக்குத் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனம் அன்று சிறிய அளவிலான கொட்டகையில் துவங்கி இன்று உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனங்கள் பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது. இதோடு 2015-இல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சர்வதேச ஒப்பந்ததாரராகும் வகையில் வளர்ச்சி பெற்றுள்ளது.

K.Karthik Raja - Financial Research Consultant

K.Karthik Raja - Financial Research Consultant


K.Karthik Raja - Financial Research Consultant

 K.Karthik Raja - Financial Research Consultant
 K.Karthik Raja - Financial Research Consultant
 K.Karthik Raja - Financial Research Consultant
 K.Karthik Raja - Financial Research Consultant
 K.Karthik Raja - Financial Research Consultant
 K.Karthik Raja - Financial Research Consultant
 K.Karthik Raja - Financial Research Consultant
 K.Karthik Raja - Financial Research Consultant
K.Karthik Raja - Financial Research Consultant

 K.Karthik Raja - Financial Research Consultant
K.Karthik Raja - Financial Research Consultant

K.Karthik Raja - Financial Research Consultant


K.Karthik Raja - Financial Research Consultant

 K.Karthik Raja - Financial Research Consultant
 K.Karthik Raja - Financial Research Consultant
K.Karthik Raja - Financial Research Consultant

ஒரே நாளில் ரூ. 35 ஆயிரம் கோடிக்கு அதிபதி... யார் இந்த தமானி?

ஒரே நாளில் ரூ. 35 ஆயிரம் கோடிக்கு அதிபதி... யார் இந்த தமானி?






பங்குச் சந்தையில் எந்தப் பங்கை எப்போது வாங்குவது, எப்போது வெளியேறுவது, அந்த செயல்பாட்டில் நினைத்துப் பார்க்கவே முடியாத வருமானத்தை எப்படி அடைவது என்பது மிகப்பெரிய ரகசியம். இந்த ரகசியத்தை அறிந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர்தான் ராதாகிருஷ்ணன் தமானி.

ஆரம்பத்தில் இவர்  வாங்கும் பங்குகளைக் குறித்து நண்பர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஏன் இந்தப் பங்கை வாங்கினாய், இதைவிட நல்ல பங்குகள் எல்லாம் இருக்கிறதே என்பார்கள். ஆனால் எப்போதும் தன்னுடைய முதலீடுகளுக்கு தனி கொள்கையைக் கொண்டிருந்தார் தமானி. ஆரம்பத்தில் வர்த்தகராக இருந்தவர் முதலீட்டாளராக மாறினார்.

இவருடைய காலத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் மறக்க முடியாத மற்றொரு பெயர் ஹர்ஷத் மேத்தா. சந்தை நோக்கர்கள், ஹர்ஷத் மேத்தாவை காளை என்றும், தமானியை கரடி என்றுகூட வருணிப்பார்கள். சந்தை காளையின்போக்கில் இருக்கும்போது ஹர்ஷத் மேத்தாவின் செயல்பாடு அதிகமாகவும், சந்தை கரடியின் போக்கில் இருக்கும்போது தமானியின் செயல்பாடும் அதிகமாக இருக்கும். ஹர்ஷத் மேத்தா பங்குகளை விலை உயர்வதில் கவனம் செலுத்துவார். ஆனால் தமானி அவருக்கு நேர்மாறாக பங்குகள் விலை இறங்குவதில் கவனம் செலுத்துவார். பங்குகள் மிகக் குறைவான விலைக்கு இறங்கும்போது முதலீடு செய்து நீண்ட காலத்துக்கு வைத்திருப்பார். நாளடைவில் இவரது போர்ட்ஃபோலியோவில் இருந்த பங்குகள் எல்லாம் பல மடங்கு உயர்ந்து பெரும் வருமானத்தைத் தரும்.

உதாரணத்துக்கு, 1995-ல் ரூ. 8 விலையில் ஹெச்டிஎஃப்சி பங்குகளை வாங்கினார். அப்போது அந்தப் பங்கில் அதிகம் முதலீடு செய்த தனிநபர் இவர்தான். இன்று ஹெச்டிஎஃப்சி பங்கின் விலை ரூ. 1400 ல் இருக்கிறது. நாளடைவில் ஃபண்ட் மேனேஜர்களும், போர்ட்ஃபோலியோ க்ரியேட்டர்களும் இவரது பங்குகளை கவனிக்க தொடங்கினர்.

சரியான பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்துகொண்டிருந்த தமானி, 2000க்குப் பிறகு பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை நிறுத்திக்கொண்டு, சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க நினைத்தார். 2000க்குப் பிறகு சூப்பர் மார்க்கெட் கலாசாரம் இந்திய நகரங்களில் பிரபலமடைய ஆரம்பித்தது. இவர் அந்த பிசினஸைத் தேர்ந்தெடுத்தார். 2003ல் மும்பை பவாய் பகுதியில் சூப்பார் மார்க்கெட் ஒன்றை தொடங்கினார். அப்போது தன்னிடம் இருந்த பணத்தை வைத்து சில இடங்களை  வாங்கிப் போட்டார். அந்த இடங்களை சூப்பர் மார்க்கெட் பிசினஸுக்காகப் பயன்படுத்தினார். அவென்யு சூப்பர்மார்ட் என்ற நிறுவனத்தை நிறுவினார். முதல் 10 ஆண்டுகளில் பெரிய அளவில் பிசினஸில் முன்னேற்றம் இல்லை. 2010 வரை மொத்தமாக 25 கடைகள் மட்டுமே இருந்தன. அதன்பிறகு வளர்ச்சியை மிகத் தீவிரமாக முன்னெடுத்தார். தற்போது மொத்தமாக 110 கடைகள் உள்ளன.

இந்தத் துறையில் ரிலையன்ஸ், பிக்பஜார், மோர் (More) போன்ற பல நிறுவனங்கள் இருந்தாலும் போட்டிகளை எதிர்கொண்டு நிலைத்து நின்றது. டி-மார்ட் முதலீட்டாளர்கள் மனதில் பதிந்துபோனது. சமீபத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வரவேற்பு குவிந்தது. 145 மடங்கு அதிகமாக இதன் பங்குகள் விண்ணப்பிக்கப்பட்டன. ஐபிஓவைத் தொடர்ந்து சந்தையில் பட்டியலானதும் அதன் பங்கு நன்றாக ஏற்றம் அடைந்தது. முதல் நாளே 114 சதவிகிதம் உயர்ந்தது.

இதன் மூலம் அவருடைய சொத்து மதிப்பு உயர்ந்து இன்று ரூ. 35000 கோடியாக இருக்கிறது. சந்தையில் பட்டியலிடுவதற்கு முந்தைய நாள் வரை போர்ஃப்ஸின் இந்தியப் பணக்காரர் பட்டியலில் 896 இடத்தில் இருந்தவர் பட்டியலான முதல் நாளே, அனில் அம்பானி, ராகுல் பஜாஜ், அஜய் பிரமல் ஆகியோரையெல்லாம் பின்னுக்குத் தள்ளி 17வது இடத்துக்கு உயர்ந்தார்.

சந்தையில் பட்டியலானதால் இவர் மட்டும் கோடீஸ்வரர் ஆகவில்லை, இவருடைய அவென்யு சூப்பர்மார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முதல் அதன் ஊழியர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் என அனைவரும் கோடீஸ்வரர்களாகவும் லட்சாதியபதியாகவும் மாறியுள்ளனர். ஏனெனில் தனது நிறுவனத்தின் பங்குகளில் கணிசமான சதவிகிதத்தை இவர்களுக்கு பரிசளித்துள்ளார். பங்கு உயர்ந்த வேகத்தில் ஒரே நாளில் அனைவரும் பணக்காரர் ஆகியுள்ளனர்.
தானும் உயர்ந்து தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தியிருக்கும் தமானியின் மகத்தான பண்புகளில் ஒன்று பிறரின் கருத்துகளைக் கேட்டறிதல். இந்தக் கேள்வியறிவு தான் அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது வட்டாரத்தினர்.  

இரண்டாவது வருமானத்துக்கு 4 அற்புதமான யோசனைகள்!

இரண்டாவது வருமானத்துக்கு 4 அற்புதமான யோசனைகள்!


"ஓடி ஓடி வேலை பார்க்கிறோம்... கிடைக்கிற வருமானம் எங்கே போகிறதென்றே தெரியவில்லை" என்பது எல்லோருக்கும் இருக்கிற பிரச்னைதான். சிலர் வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறார்கள். ஆனால் பல குடும்பங்களில் ஒரே ஒரு வருமானம்தான். விற்கிற விலைவாசியில், மாறிவிட்ட வாழ்க்கைமுறையில் ஒரே ஒரு வருமானத்தை வைத்து காலத்தை ஓட்டுவது என்பது கடினமான காரியம். ஆனால் இந்தச் சூழலிலிருந்து அவர்கள் எளிதில் வெளியே வர ஒரு வழி இருக்கிறது. அது இரண்டாம் வருமானம். இரண்டாவது வருமானத்தை உருவாக்குவதன் மூலம் பண நெருக்கடியைச் சமாளிக்க முடியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இரண்டுதான். கூடுதல் உழைப்பும் திட்டமிடுதலும் தான்.

இரண்டாவது வருமானத்துக்கான வழிகளைப் பார்ப்பதற்கு முன் நம்மிடம் இருக்கும் திறமைகள் என்னென்ன? நம்முடைய பிரச்னைகள் என்னென்ன? நம்முடைய ரிஸ்க் எடுக்கும் திறன் எந்தளவுக்கு இருக்கிறது? நம்மிடம் பணம் எவ்வளவு இருக்கிறது? இதையெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இதன் அடிப்படையில்தான் இரண்டாவது வருமானம் பார்ப்பதற்கான வழியை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும். இப்போது இரண்டாவது வருமானத்துக்கு வழி செய்யும் யோசனைகளைப் பார்க்கலாம் வாங்க.

பங்குச் சந்தை:

நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி, தொழில் செய்பவராக இருந்தாலும் சரி உங்களுடைய வருமானத்தில் அவசியமான செலவுகள் போக மீதி இருக்கும் பணத்தில் பாதியை அவசர தேவைகளுக்கு வைத்துக்கொண்டு மீதி பாதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பலர் சேமித்து வைக்கிறேன் என்று வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கிறார்கள். சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தினால் உங்களுக்கு அதிகபட்சம் 6 சதவிகித வட்டிதான் கிடைக்கும். ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பணவீக்கத்தைத் தாண்டியும் அதிக வருமானத்தைப் பார்க்க முடியும். பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யத் தெரியாதவர்கள், பங்குகளைத் தொடர்ந்து பின்பற்ற நேரமில்லாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் கணிசமாக உங்களுடைய முதலீடு வருமானம் கொடுக்கும். பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் இதில் சாத்தியம்.

வணிகம்:

பொருட்களை வாங்கி விற்கும் வணிகத்தைச் செய்யலாம். குறைந்த விலையில் பொருட்களை வாங்கி, விலை ஏறும்போதோ அல்லது மதிப்புக் கூட்டுதல் செய்தோ விற்பனை செய்யலாம். இதன் மூலம் கணிசமாக இரண்டாவது வருமானத்தை ஈட்ட முடியும். இதற்கு நம்மிடம் யோசனையும் கொஞ்சம் பணமும் இருந்தால் போதும். குடும்பத்தினரின் உதவியுடன் ஸ்மார்ட்டாக பிசினஸ் செய்யலாம். பழைய பொருட்களையும் வாங்கி விற்கலாம். அதற்காக OLX, EBAY போன்ற தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிறுதொழில்:

தொழில் யோசனைகள் இருப்பின் அதை செயல்படுத்தி பாருங்கள். வேலை பார்க்கும் நம்மால் தொழில் செய்ய முடியுமா என்று தயங்க வேண்டாம். நண்பர்களுடனோ, குடும்ப உறுப்பினர்களுடனோ சேர்ந்து தொழிலைத் தொடங்கி நடத்துங்கள். அதற்கான முதலீட்டுக்கு சேமிப்பிலிருந்து எடுத்தோ அல்லது கடன் பெற்றோ ஆரம்பிக்கலாம். அவ்வப்போது தொழில் நிலவரம் குறித்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் வேலைக்குச் செல்பவராலும் சிறப்பாக தொழில் நடத்த முடியும்.

அறிவை காசாக்கலாம்:

இந்த டிஜிட்டல் யுகத்தில் நமக்கு உள்ள திறமைகளை வைத்து இரண்டாவது வருமானம் பார்ப்பது மிகவும் எளிது. யூடியூப் சேனல், டப்ஸ்மாஷ், பிளாக் போன்றவற்றில் நமக்கு திறமையும் ஆர்வமும் இருந்தால் அதனை ஓய்வு நேரங்களில் செயல்படுத்தி சம்பாதிக்கலாம். தொடர்ந்து இந்தத் தளங்களில் இயங்கி வந்தால், கூகுள் கொடுக்கும் விளம்பர வருவாய் மூலம் வருமானம் வரும். மொழி அறிவு சிறப்பாக இருந்தால் மொழிப்பெயர்ப்பு பணி செய்வதன் மூலம் நன்றாக சம்பாதிக்க முடியும்.

உங்களுக்கு இருக்கும் திறமைகளை எப்படியெல்லாம் பயனுள்ள வகையில் மாற்றலாம் என்பதைப் பாருங்கள். உங்களுக்கான இரண்டாவது வருமானம் உங்களுடைய கையில்தான் இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு : வெளியேறு கட்டணம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு : வெளியேறு கட்டணம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?



மியூச்சுவல் ஃபண்ட்  முதலீடு :  வெளியேறு கட்டணம் - கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  2016-17 ம் நிதி ஆண்டில் மட்டும் 77.40 லட்சம் கணக்குகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை தற்போது நல்ல உச்சத்தில் இருப்பதைப் பார்த்து பலர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்கிறார்கள். நல்ல விஷயம். ஆனால் அதே நேரம் மியூச்சுவல் ஃபண்டிலிருந்து குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே வெளியேறும் போது, குறிப்பிட்ட சதவிகித தொகை  பிடிக்கப்படுவதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

வெளியேறு கட்டணம் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துகொண்டிருக்கும்போது குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே தங்களது முதலீடுகளை வெளியே எடுக்கும்போது கட்டணம் விதிக்கப்படும். இந்த அபராதம் எக்ஸிட் லோட் (Exit Load) என்று சொல்லப்படுகிறது. தமிழில் வெளியேறும் கட்டணம் என்று குறிப்பிடுகிறார்கள்.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பெரும்பாலும் நீண்ட காலத்துக்கானவையாகவே கருதப்படுகின்றன. ஃபண்ட் மேனேஜர்களும் அதன் அடிப்படையில்தான் தங்களது முதலீடுகளைத் திட்டமிடுவார்கள். அப்படி இருக்கும்போது திடீரென்று பல முதலீட்டாளர்கள் வெளியேறும் போது ஃபண்ட் மேனேஜர்களுக்கு குறிப்பிட்ட ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள நிறுவனப் பங்குகளை  விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இது மற்ற முதலீட்டாளர்களின் வருமானத்தை பாதிக்கும். எனவே குறுகிய காலத்தில் முதலீட்டாளர்கள் வெளியேறுவதால் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்கவும், முன்பே முதலீடுகளை வெளியே எடுப்பதைத் தவிர்க்கவும் தான் இந்த வெளியேறும் கட்டணம் விதிக்கப்படுகிறது.
எவ்வளவு கட்டணம்?

பெரும்பாலான மியூச்சுவல் திட்டங்களுக்கு ஏற்ப இந்த வெளியேறு கட்டணம் விதிக்கப்படுகிறது. வெளியேறு கட்டணம் இல்லாத சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் உள்ளன. ஆனால் வெளியேறும் கட்டணம் இருக்கும் திட்டத்துக்கும் வெளியேறும் கட்டணம் இல்லாத திட்டத்துக்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லை. திட்டத்தின் வளர்ச்சியோடு எந்தவித தொடர்பும் இந்த வெளியேறும் கட்டணத்துக்கு இல்லை.

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு முதலீடுகளை வெளியே எடுக்கும்போது கட்டணம் குறையும். நாம் முதலீட்டை வெளியே எடுக்கும் காலம் நீடிக்கும்போது கட்டணமே இருக்காது.    

உதாரணத்துக்கு யுடிஐ கில்ட் அட்வாண்டேஜ் லாங் டேர்ம் திட்டத்தில் 548 நாள்களுக்குள் முதலீட்டை விற்றால் 2 சதவிகிதம் வெளியேறு கட்டணம் வசூலிக்கப்படும். 1095 நாட்களில் எடுக்கும்போது வெளியேறு கட்டணம் 1 சதவிகிதம். ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் பாண்ட் ஆப்பர்சுனிட்டீஸ் ஃபண்ட் 10 சதவிகித முதலீட்டை எடுக்க எந்தக் கட்டணமும் இல்லை. அதைத் தாண்டி எடுக்கும்போது 12 மாத காலத்திற்கு 3 சதவிகிதமும், 24 மாத காலத்திற்கு 2 சதவிகிதம், 36 மாத காலத்திற்கு 1 சதவிகிதமும் கட்டணம் விதிக்கிறது.

இதனை தவிர்ப்பது எப்படி?

மிக அவசியமாகத் தேவைப்பட்டால் மட்டுமே முதலீடுகளை வெளியே எடுக்க வேண்டும் என்பதை நாம் உறுதியாகப் பின்பற்ற வேண்டும்.

பெரும் சொத்து மதிப்பு உள்ள தனிநபர்கள் தான் சந்தை உச்சத்தை அடைந்து திடீரென விழும்போது விற்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் கட்டணம் பெரிதாக தெரியாது. ஆனால் சிறு முதலீட்டாளர்கள் பதட்டத்தில் விற்கும்போது கட்டணத்தோடு சேர்த்து, குறுகிய கால ஆதாய வரியும் செலுத்த வேண்டி வரும்.
பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் வெளியேறும் கட்டணம் 1 சதவிகிதம் இருக்கும். பொதுவாக ஓராண்டுக்கு பிறகு எடுத்தால் இந்தக் கட்டணம் இருக்காது.

அதேநேரத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் ஒரு வருடத்துக்குள்ளேயே முதலீடுகளை வெளியே எடுக்கும் போது, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் 15 சதவிகிதம் என வைத்துக் கொண்டால் குறுகிய கால மூலதன ஆதாய வரி   15% கட்ட வேண்டி வரும்.  ஓராண்டுக்கு பிறகு ஈக்விட்டி ஃபண்ட்களை விற்றால், குறுகிய கால மூலதன ஆதாய வரி மற்றும் வெளியேறும் கட்டணத்தை தவிர்க்க முடியும்.

நீண்டகாலத்துக்கு முதலீடு செய்யுங்கள். நல்ல லாபம் பார்க்க முடியும்.

உங்க பணம் எப்ப டபுள் ஆகும்?

உங்க பணம் எப்ப டபுள் ஆகும்?



‘‘இன்னைக்கு 1 லட்சம் ரூபா குடுக்குறேன். ஒரு வருஷத்துக்குள்ள அது டபுள் ஆகுமா?’’ என்று கேட்பவர்கள் நம்மில் ஏராளம். ‘‘நிச்சயம் ஆகும்’’ என்று பணத்தை வாங்கி, பட்டை நாமம் போட்டுவிட்டு, ஓடுகிறவர்களும் நம்மூரில் ஏராளம். உண்மையில், உங்கள் பணம் எப்போது டபுள் அல்லது டிரிப்பிள் ஆகும்?

உங்கள் பணம் எப்போது, அதாவது எத்தனை ஆண்டுகள் கழித்து டபுள் ஆகும் என்பதைக் கண்டுபிடிக்க சிம்பிளான ஒரு பார்முலா உண்டு. உங்கள் பணத்துக்கு எத்தனை சதவிகிதம் வருமானம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டு அதை 72 என்கிற எண்ணால் வகுத்தால், உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும்.

உதாரணமாக, உங்கள் பணத்துக்கு 5% வருமானம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 72-யை 5-ஆல் வகுத்தால் உங்களுக்கான விடை கிடைக்கும். அதாவது, உங்கள் பணம் இரண்டு மடங்காகப் பெருக 14.40 ஆண்டுகள் எடுக்கும்.

உங்கள் முதலீட்டுக்கு 1% வருமானம் கிடைத்தால், உங்கள் பணம் இரண்டு மடங்காகப் பெருக, 72 ஆண்டுகள் ஆகும்.

2% வருமானம் கிடைத்தால், 36 ஆண்டுகளாகும்.
3% வருமானம் கிடைத்தால், 24 ஆண்டுகளாகும்.
4% வருமானம் கிடைத்தால், 18 ஆண்டுகளாகும்.
5% வருமானம் கிடைத்தால், 14.40 ஆண்டுகளாகும்.
6% வருமானம் கிடைத்தால், 12 ஆண்டுகளாகும்.
7% வருமானம் கிடைத்தால், 10.29 ஆண்டுகளாகும்.
8% வருமானம் கிடைத்தால், 9 ஆண்டுகளாகும்.
9% வருமானம் கிடைத்தால், 8 ஆண்டுகளாகும்.
10% வருமானம் கிடைத்தால், 7.20 ஆண்டுகளாகும்.
11% வருமானம் கிடைத்தால், 6.55 ஆண்டுகளாகும்.
12% வருமானம் கிடைத்தால், 6 ஆண்டுகளாகும்.
13% வருமானம் கிடைத்தல், 5.54 ஆண்டுகளாகும்.
14% வருமானம் கிடைத்தால், 5.14 ஆண்டுகளாகும்.
15% வருமானம் கிடைத்தால், 4.80 ஆண்டுகளாகும்.
16% வருமானம் கிடைத்தால், 4.50 ஆண்டுகளாகும்.
17% வருமானம் கிடைத்தால், 4.24 ஆண்டுகளாகும்.
18% வருமானம் கிடைத்தால், 4 ஆண்டுகளாகும்.
19% வருமானம் கிடைத்தால், 3.79 ஆண்டுகளாகும்.
20% வருமானம் கிடைத்தால், 3.60 ஆண்டுகளாகும்.

ஆக, உங்கள் பணம் நான்கு ஆண்டு காலத்துக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 18 முதல் 20% வரை வருமானம் கிடைப்பதாக இருக்க வேண்டும்.

சரி, எத்தனை ஆண்டுகளுக்கும் நம் பணம் டபுள் ஆகும் என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டோம். இனி, எதில் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்ப்போமா?

சிலர், தங்கத்தில் நிறைய வருமானம் கிடைக்கும் என்பார்கள். சிலர், ரியல் எஸ்டேட்டில் நல்ல லாபம் கிடைக்கும் என்பார்கள். இன்னும் சிலர், எஃப்.டி.யில் என்பார்கள். இன்னும் சிலருக்கு மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என்பார்கள்.

இதில் எஃப்.டி.யைத் தவிர (குறுகிய காலத்துக்கு மட்டும்), எல்லா முதலீடுகள் மூலமும் கிடைக்கும் எல்லா வருமானமும் ஏற்ற, இறக்கத்துக்கு உட்பட்டதே. இவ்வளவு வருமானம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லவே முடியாது. அப்படி யாராவது சொன்னால், அதை நம்பாமல் இருப்பது நமக்கு யாரும் நாமம் போடாமல் இருக்க உதவும்.

நமக்கு எவ்வளவு வருமானம் வேண்டும் என்பதை நாம் எப்படி நிர்ணயித்துக் கொள்வது? சிலர், எனக்கு 20% குறையாமல் வேண்டும் என்பார்கள். இன்னும் சிலர் எனக்கு 8% வருமானம் கிடைத்தாலே போதும் என்பார்.
இரண்டு விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த அளவை நாம் நிர்ணயம் செய்துகொள்ளலாம். ஒன்று, பணவீக்கம்; இரண்டாவது, நாம் எடுக்கத் துணியும் ரிஸ்க்.

பணவீக்கம் என்பது வேறொன்றுமல்ல, விலைவாசி உயர்வு. ஒவ்வொரு ஆண்டு ஒரு பொருளின் விலை 8% உயரும் என்றால், நம்மிடம் இருக்கும் பணத்தின் மதிப்பும் 8% உயர்ந்தால் மட்டுமே நம்மால் அந்தப் பொருளை எதிர்காலத்தில் வாங்க முடியும். தற்போது பண வீக்கம் சுமார் 8% என்கிற நிலையில், இருப்பதால், நம்முடைய வருமானமும் குறைந்தபட்சம் 8 சதவிகிதத்துக்கு மேல் கிடைக்கிற மாதிரி இருக்க வேண்டும்.

இரண்டாவது, ரிஸ்க். நமக்கு எவ்வளவு வருமானம் வேண்டும் என்று கேட்பதற்கு முன்பு, ஒரு முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் எவ்வளவு என்பதை ஆராய வேண்டும். அதாவது, அசலை இழப்பதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறோம் என்பதற்கேற்ப நம் வருமானம் இருக்கும். அசலை நான் இழக்கவே விரும்பவில்லை எனில், எனக்கு எஃப்.டி., கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் சரியான முதலீடாக இருக்கும். குறுகிய காலத்தில் அசல் கொஞ்சம் இழந்தாலும் பரவாயில்லை, நீண்ட காலத்தில் 14 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களிலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யலாம்.

உங்கள் பணத்தை டபுள் அல்லது ட்ரிபிள் எப்போது ஆகும் என்று இப்போது புரிந்ததா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: சந்தேகங்களும் தீர்வுகளும்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: சந்தேகங்களும் தீர்வுகளும்



நம் எண்ணங்கள் தான் வாழ்க்கை என்பார்கள். நமது எண்ணங்கள் என்பது நாம் படிப்பது பார்ப்பது கேட்பதே!

ஆனால் அவை அனைத்தும் சாஸ்வதம் இல்லை. பல விஷயங்கள் முழுவதும் புரியாமலே முதலில் கேட்ட போது என்ன எண்ணங்கள் தோன்றியதோ அதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையிலேயே நிறைய தீர்மானங்களை நிறைவேற்றுகிறோம். அடிப்படை புரிதல் அரைகுறையாக இருக்கும் போது தீர்மானத்தின் வெளிப்பாடுகளும் சரியாக இருக்க சாத்தியம் இல்லை.

இது போன்றே நிதி சம்பந்தப்பட்ட கருத்துக்களை நிறைய பேர் சரி வர புரியாமல் எடுக்கிற தீர்மானங்கள் சரியான பலனை தருவதே இல்லை. எனவே, மியூச்சுவல் ஃபண்ட்களில்  உள்ள தற்போதைய தவறான எண்ணங்கள் எவை? அதன் உண்மையான தாத்பரியம் என்ன என்று புரிந்து முதலீடு செய்வோம் வாருங்கள்!!

மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய  தவறான கருத்துக்களும் அவற்றுக்கான தீர்வுகளும்.

1. மியூச்சுவல் ஃபண்ட் பணக்காரர்களுக்கு மட்டுமே  (Mutual funds are for rich)

 மியூச்சுவல் ஃபண்ட் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே அல்லது படித்தவர்களுக்கு மட்டுமே என்று! இது முற்றிலும் தவறான புரிதல். இந்த முதலீடு  எல்லோருக்கும் ஏற்றதே. மியூச்சுவல் ஃபண்ட்டில் ரூ. 500 கூட முதலீடு செய்ய முடியும். இது ஏழைக்கும், பணக்காரனுக்கு, பாமரனுக்கும் பொருந்தும். பணத்தை பெருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட்களில் பங்கு பெறலாம்.

ஒருவர் ரூ. 5,000 கொடுத்து ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறார். மற்றொருவர் அதே நாளில் ரூ 50,000 அதே திட்டத்தில் முதலீடு செய்கிறார். இருவருக்கும் 5 வருடம் கழித்து கிடைக்கும் லாப நஷ்டம் ஒரே விகிதம்தான். கிடைக்கும் தொகை அவர்களது முதலீட்டு தொகைக்கு ஏற்றவாறு அமையும்.

2. மியூச்சுவல் ஃபண்ட் என்பது சூதாட்டம் (Mutual funds are like gambling).

மியூச்சுவல் ஃபண்ட் என்பது சூதாட்டம் இல்லை. மியூச்சுவல் ஃபண்ட்  திட்டத்தில் பங்கில் மட்டும் முதலீடு செய்கிறார்கள் என பலரும் நினைக்கிறார்கள். அதில், நஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே எனக்கு தேவை இல்லை என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள். இதுவும் சரி போல் தோன்றினாலும் , தவறுதான்!

மியூச்சுவல் ஃபண்ட்களில் பல திட்டங்கள் உள்ளன. அவை பங்கில் மட்டுமே முதலீடு செய்வதில்லை. “தட்டுங்கள் திறக்கப்படும்” என்பது போல, “கேளுங்கள் கொடுக்கப்படும்” வகையாக எண்ணிலடங்கா திட்டங்கள் உள்ளன.  இதில் பங்கு மற்றும் கடன், மேலும் இரண்டும் சேர்ந்த கலப்பின திட்டங்கள் என வகை வகையாக உள்ளன. உங்களுக்கு ஏற்ற வகையை தேர்தெடுத்துக்கொள்ளுங்கள். எல்லா திட்டங்களும் எப்போதும் நஷ்டம் தருவதில்லை. சந்தையின் செயல்பாட்டுக்கு ஏற்ப பங்குச் சார்ந்த திட்டங்களில்  லாப - நஷ்டம் மாறுபடுகிறது.

3. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது கடினம் (Investing in mutual funds are tedious) -

மியூச்சுவல் ஃபண்ட்களில்  முதலீடு செய்வது கடினம் என்ற கருத்து பரவலாக உள்ளது. தங்கம் வாங்குவது போல் வங்கியில் வைப்பு நிதி போடுவது போல் இது எளிதல்ல என்று எண்ணுகிறார்கள். இல்லவே இல்லை, இது எளிது: சரியாக  புரிந்துகொண்டுவிட்டால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில்  முதலீடு செய்வது, தேவை பட்ட போது பணத்தை திரும்ப எடுத்துக்கொள்வது எளிது தான். சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம் என்பது போல தான். முதலில் முதலீடு செய்ய படிவங்கள் அதிகம் போல் தோன்றினாலும் அடுத்த அடுத்த முதலீடுகள் மிக மிக எளிதே. முயன்று தான் பாருங்களேன். முயற்சி திருவினையாக்கும்.

4. எஸ்ஐபி  முதலீட்டில் நஷ்டம் வராது (Sure shot way to get profit is through SIP)

 எஸ்ஐபி என்றாலே நஷ்டம் வர வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டே எஸ்ஐபியில் முதலீடு செய்கிறார்கள். இல்லை எஸ்ஐபி ஒரு திட்டம் என்று எண்ணி முதலீடு செய்கிறார்கள். இரண்டுமே பாதி கிணறு தாண்டுவது போலதான். ஆபத்தே!! மொத்த தொகை முதலீடோ, எஸ்ஐபி முதலீடோ நமக்கு கிடைக்கும் லாபமோ, நஷ்டமோ பங்குச் சந்தையை பொறுத்தே அமையும். நாம் வாங்கும் யூனிட்டின் விலை சராசரியாக பார்க்கும் போது குறைந்திருப்பதாலும் பெரும்பாலான எஸ்ஐபிகள் நீண்ட கால எஸ்ஐபி என்பதாலும் லாபம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எஸ்ஐபி என்பது ஒரு திட்டமல்ல, அது ஒரு முதலீட்டு முறையே ஆகும். நீண்ட கால எஸ்ஐபியில் நஷ்டம் வரும் வாய்ப்புகள் குறைவே. யாரும் எஸ்ஐபியில் நஷ்டமே வராது  என்று முதலீடு செய்ய முனைவது புத்திசாலித்தனமான காரியம் அல்ல.

5. அதிக நட்சத்திர குறியீடு திட்டங்கள் அதிக லாபம் தரும் (Highly rated funds are always profitable)

இணையத்தில் பல தளங்கள், பல திட்டங்களை ஆராய்ந்து அதன் மதிப்பிற்கேற்றவாறு குறியீடுகள் தருகின்றன (திட்ட மதிப்பு குறியீடுகள்: 5 நட்சத்திர குறியீடு, 4 நட்சத்திர குறியீடு போன்றவை). பொதுவாக குறியீடுகள் அதிகமாக இருக்கும் போது அது நல்ல திட்டமாகவும் நல்ல நிறுவனத்திலிருந்து செயல்படும் திட்டமாகவும் இருக்கலாம். ஆனால் அதை வைத்தே லாபம் இருக்கும் என்று அவசியம் இல்லை.

எனவே தான், மியூச்சுவல் ஃபண்டில்  முதலீடு செய்வதற்கு முன் ஒரு அடிப்படை தத்துவத்தை புரிந்துகொள்ளவேண்டும். நமக்கு வரும் லாபமோ நஷ்டமோ நிகழவிருக்கும் சந்தையின் ஏற்ற இறக்கங்களை பொறுத்தே அமையுமே தவிர முடிந்து போன சரித்திர நிகழ்வுகளை வைத்து அமைவதில்லை.

தற்போது 5 நட்சத்திர குறியீடு பெற்ற திட்டங்கள் 6 மாதத்திற்கு பிறகு 3 நட்சத்திர குறியீடாக மாறலாம். அது போல் 3 நட்சத்திர குறியீடு திட்டங்கள் சில மாதங்களுக்கு பிறகு 4 நட்சத்திர குறியீடாக மாறலாம். ஆனால் நாம் அன்றாடம் பார்க்கும் திட்ட விவரங்கள் அனைத்துமே முடிந்து போன நிகழ்வின் குறியீடு. இதை நன்கு மனதில் கொள்ளவேண்டும். பழங்கதை பேசி பயனில்லை என்பது இங்கே மிகவும் நன்றாக பொருந்தும்.


6. என்ஏவி குறைந்த திட்டங்கள் முதலீட்டுக்கு மிகவும் ஏற்றவை  (Lower NAV is better to invest)

மியூச்சுவல் ஃபண்ட்களில் மிக தவறான புரிதல் இதுவே. என்ஏவி அதிகமாக இருக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. அதே சமயத்தில் என்ஏவி குறைவாக இருக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என்று எண்ணுவதே. இதனாலேயே நிறைய பேர் புதிதாக வரும் திட்டங்களில் முக மதிப்பு விலையான ரூ.10லேயே முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதுவும் சரியான கருத்து அல்ல. உதாரணமாக, இருவர் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான வெவ்வேறு திட்டங்களில் ஒரே தொகையை  முதலீடு செய்கிறார்கள். இரண்டு திட்டமும் சந்தையை ஒட்டியே வளர்ந்திருந்தால் இருவருக்கும் ஒரே மாதிரியான லாபமே கிடைக்கும்.

மேலும் விரிவாக புரிவதற்கு முதலாமவர், ரூ.60,000 க்கு யூனிட் விலை ரூ.60 என்று 1,000 யூனிட்டுகள் வாங்கினார். இரண்டாமவர், புதிதாக வந்த அதே போல் உள்ள  திட்டத்தில் யூனிட் விலை ரூ.10 என்று 6,000 யூனிட்கள் வாங்கினார். சந்தையில் வருட வளர்ச்சி 10% இருக்கும் போது இரண்டு திட்டங்களும் சந்தையை ஒட்டி வளர்ந்திருந்தால் வருட முடிவில் இருவரின் முதலீட்டு மதிப்பு ரூ.66,000 ஒட்டியே இருக்கும்.

காரணம் முதல் திட்டத்தின் என்ஏவி ரூ. 60லிருந்து ரூ. 66க்கு சென்று விடும். இரண்டாம் திட்டத்தின் என்ஏவி ரூ. 10லிருந்து ரூ.11க்கு தான் செல்லும். ஒரே மாதிரியான திட்டம் என்றபட்சத்தில் என்ஏவி ரூ.10லிருந்து 16க்கு போக வாய்ப்புகள் மிக மிக குறைவு. எனவே என்ஏவிக்கும் லாப விகிதத்திற்கும் நேரடி சம்பந்தம் ஏதும் இல்லை.

6. மியூச்சுவல் ஃபண்ட் ஒரு நீண்ட கால முதலீடு - குறுகிய காலத்தில் பணம் எடுக்க முடியாது  (Mutual fund is a long term investment)

 மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்தால், அவசர தேவைகளுக்கு நமது பணத்தை எடுத்துக்கொள்ள முடியாது என்று எண்ணுகிறார்கள். இதுவும் தவறான கருத்து.
தனி நபர் நிதி மேலாண்மையில் முதலீடுகள் செய்த பணத்தை மிக எளிதாக திரும்ப பெறுவது மியூச்சுவல் ஃபண்ட்களில் மட்டுமே!!

உதாரணமாக, வியாழன் முதலீடு செய்து அடுத்து திங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அவ்வளவு எளிது. தங்கத்தை வாங்கி விற்று பணம் பெறுவது, தங்கத்தை அடகு வைத்து பணம் பெறுவது , வீட்டு மனைகளை விற்று பணம் பெறுவதை விட மியூச்சுவல் ஃபண்ட்டில் பணம் எடுப்பது மிக மிக எளிதான செயல். மேலும், நமது தேவைகளுக்கு ஏற்றபடி உதாரணமாக, குழந்தைகளின் பிற்கால படிப்பு, திருமணம், அல்லது உடனடி தேவைகளான கைபேசி வாங்குவது, கார்  வாங்குவது என்று குறிக்கோளுக்கு ஏற்றவாறு திட்டங்களை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்து பயன்பெற பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன.

7. மியூச்சுவல் ஃபண்டும், காப்பீடும் ஒன்றே  (Insurance and Mutual Funds are same)

 இதுவும் ஒரு தவறான கருத்து. காப்பீடு என்பது எதிர்பாராத நிகழ்வுகளுக்கு கிடைக்கும் காப்பீட்டு தொகை. மியூச்சுவல் ஃபண்ட் என்பது முதலீட்டை பெருக்குவதற்கான வழிமுறை. எனவே, இரண்டும் ஒன்றல்ல. முதலீடு என்று நினைத்து காப்பீடு எடுப்பதில் பலன் அதிகமில்லை. காப்பீட்டு தேவைகளுக்கு மட்டும் காப்பீடும், பணத்தை பெருக்குவதற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே சரியான தீர்வாகும்.

காப்பீடும் மியூச்சுவல் ஃபண்ட்டும் ஒன்றே என்று நினைப்பதற்கு சில வலுவான, தவறான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் இரண்டையும் வழங்கும் குழுமங்கள்  பெரும்பாலும் ஒன்றாகவே உள்ளன.

உதாரணமாக, ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் இன்ஷூரன்ஸ் என்பது காப்பீடு வழங்கும் நிறுவனம். ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் மியூச்சுவல் ஃபண்ட் என்பது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். இரண்டிற்கும் தனி தனிச் சட்ட திட்டங்கள், வருமானங்கள், லாப விகிதங்கள். இரண்டும் தனி, தனி நிறுவனமாக இருந்தாலும், ஒரே குழுமம். எனவே காப்பீட்டில் முதலீடு செய்து விட்டு மியூச்சுவல் ஃபண்ட் என்று நினைத்துக் கொள்ள கூடாது.. இது போன்ற தருணங்களில் முதலீடு செய்யும் போது புரிந்து செயல்பட வேண்டும்

8. மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய டீமேட் தேவை  (For mutual fund investment, DMAT account is a must)

 டீமேட் கணக்கு வைத்திருந்தால் தான் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம் என்று எண்ணுகிறார்கள். டிமேட் கணக்கிலும் மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்டுகளை வாங்க முடியும். ஆனால் டிமேட் அவசியம் இல்லை. டிமேட் கணக்கு இல்லாமலே மியூச்சுவல் ஃபண்ட் வாங்கி நமது பெயரில் வைத்துக்கொள்ளலாம்.

காகித பத்திரங்கள் இல்லாமலும் டிமேட் கணக்கு இல்லாமலும் இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வைத்து கொள்ளமுடியும். இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் இது மிக மிக எளிதே.

9. மயக்கும் அல்லது ஈர்க்கும் திட்டத்தின் பெயர்களை பார்த்து முதலீடு செய்வது  (Name sake investing)

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் பெயர்களுக்கும் அதில் வரும் லாபத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. ஒரே பெயர் கொண்ட பல்வேறு திட்டங்கள் பல்வேறு விகிதங்களில் லாபம் தருகின்றன. அதன் காரணம் அந்தந்த திட்டங்களின் அடிப்படை பங்கு முதலீடும் அது சார்ந்த முதலீடும். எனவே திட்டத்தின் பெயரும் ஒரு குறியீடே!

திட்டம் எவ்வாறு இயக்கப்படும் என்பதை கண்காணித்து அதில் முதலீடு செய்ய வேண்டும். நாம் முதலீடு செய்ய போகும், திட்டம் எந்த, எந்த, வகையான பங்குகளில் முதலீடு செய்யும், படித்து, கேட்டு, புரிந்து முதலீடு செய்வது நலம்

ஸ்டார்ட்அப் தொடங்க இந்தக் குணம் அதிஅவசியம் StartUpBasics

ஸ்டார்ட்அப் தொடங்க இந்தக் குணம் அதிஅவசியம்  StartUpBasics



கனவு காணுங்கள் என்பார் அப்துல்கலாம். எல்லையை தாண்டி கனவு காணுங்கள் என ஒரு படி அதிகமாக சொல்லும் ஸ்டார்ட்அப் உலகம். அந்த உலகத்தில் போகத் துடிக்கும் எவரும் கனவிலும் நிகழாத காரியத்தை மேற்கொள்ள நேர்ந்தாலும் “இது நடக்க வாய்ப்பே இல்லை” என்று சொல்வது தவறு. இது நடக்க இன்று தொழில்நுட்பம் போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி யாரும் யோசிக்காத அல்லது யோசிக்க தயங்கிய ஒரு ஐடியாவை வெற்றிகரமாக துணிந்து செய்துகொண்டிருப்பவர் தான் எலன் மஸ்க் (Elon musk).

அப்படி எல்லைத் தாண்டிய சிந்தனையை ஒருவர் பெற என்ன செய்ய வேண்டுமோ அதை சிறுவயதிலேயே இயல்பாக செய்து கொண்டிருந்தார் எலன். ஆம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கும் அதிகமாக படித்தார். பாடபுத்தகங்களை அல்ல அறிவியல், பொறியியல் புத்தகங்களை. அவர் தந்தை தென்னாப்ரிக்காவில் ஒரு பொறியியல் வல்லுநர், தாய் ஒரு விளம்பர மாடல். அப்பாவின் நூலகத்தில் வாங்கி குவித்த எல்லாவிதமான புத்தகங்களையும் படித்து முடித்தார் எலன். அந்த புத்தகங்கள் எல்லாம் படித்து தீர்ந்து போனபோது தடித்தடியான Encyclopedia புத்தகங்களை எடுத்து வாசித்தார். இதெல்லாம் அவரது பத்து வயதில் நடந்திருக்கிறது.

பெற்றோர்கள் பிரிகிறார்கள். இவர் தந்தையின் வளர்ப்பில் செல்கிறார். பள்ளியில் பயங்கர சுட்டி. படிப்பில் அதைவிட கெட்டி. BASIC என்ற கணினி மொழியை மூன்றே நாட்களில்கற்று முடிக்கிறார். ஒரு குட்டி வீடியோ கேமை உருவாக்கி அதை 500$க்கு விற்றும் விடுகிறார்

சம்பாதித்த காசில் மீண்டும் புத்தகத்தை தான் வாங்குகிறார். இம்முறை Hitchhikker’s Guide to the Galaxy. அது ஒரு காமிக் நாவல். எண்ணற்ற அறிவியல் கேள்விகளை எழுப்பி அதற்கு விடை கண்டுபிடிக்கும் அதிபுத்திசாலிகள் உலவும் கதை. படித்து முடித்தபோது மனித இனத்தை பூமியின் பேரழிவில் அழியவிடாமல் காக்கவேண்டும் அதுவே தனது லட்சியம் என்று முடிவெடுக்கிறார். அந்த 14 வயதில் அவர் மனதில் விழுந்த அந்த விதை பின்னால் ஒரு பெரும் தனியார் விண்வெளி நிறுவனத்தை கட்டமைக்க காரணமாகிறது. நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆக வேண்டும்.

15 வயது ஆனபோது தந்தை படித்தது போதும் வேலைக்கு செல் என்கிறார். நான் வீட்டை விட்டு செல்கிறேன் என்று அம்மாவின் கனடா குடியுரிமை பயன்படுத்தி கனடா கிளம்பிவிட்டார் எலன். கனடாவில் உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுகொண்டே படிப்பையும் தொடர்கிறார். கடுமையான நாட்கள். இருந்தும் கல்லூரியில் இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் இரட்டை பட்டப்படிப்பு படித்து தேறுகிறார்.

இதற்கு நடுவில் குட்டி குட்டியாய் பல முயற்சிகள் . சிறிதுகாலம் ஒரு வங்கியில் உதவியாளர் வேலை. பின்னர் சிறிய அறையில் இருந்தவாறே கம்ப்யூட்டர்களை விற்பனை செய்கிறார். கல்லூரியில் படிக்கும் போதே அவரது அறையில் சிறிய அளவில் பார் நடத்துகிறார். இந்த தேடல் தான் ஒரு ஸ்டார்ட்அப்பை தொடங்கவிரும்பும் எவருக்கும் உள்ள அடிப்படையான குணம். எல்லோரும் செல்லும் பாதையில் இருந்து விலகி புதுப்பாதையை பயணத்தை தேர்ந்தெடுக்க துணிந்தவர்கள் மட்டுமே வருங்காலத்தை செதுக்குகிறார்கள்.

ஒருநாள் தன் சகோதரனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு ஐடியா தோன்றுகிறது. அதை பேசிப்பேசி வளர்த்தெடுக்கிறார். அந்த ஐடியா பிறந்தவுடன் புகழ்பெற்ற Stanford பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த Ph.D படிப்பை விட்டு பாதியில் விலகி Zip2 என்ற ஸ்டார்ட்அப்பை தொடங்குகிறார். அன்றைய இணையத் தேவையான தேடுபொறி தான் இவர்கள் கான்செப்ட்.

தந்தையின் 28000 டாலர் பணத்துடன் தொடங்கி, மூன்று மாதங்கள் ஆபிசை விட்டு நகராமல் அதை வளர்க்கிறார். உழைப்பு வீண் போகவில்லை. 3 மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்கிறது. மூன்றாண்டு காலம் பல ஏற்ற இறக்கங்களுடன் நகர்கிறது. இவர்களின் ஸ்டார்ட்அப்பை Compaq Computers விலைக்கு வாங்கி Altavista என்ற தேடுபொறியுடன் இணைக்கப்படுகிறது. (பின்னர் இந்த ஆல்டாவிஸ்டா யாகூவுடன் இணைந்தது வேறு கதை) நிறுவனம் விற்கப்பட்டதில் இவரின் பங்கு 22 மில்லியன் டாலர்கள்.

முதலீட்டாளர்கள் உதவியால் வளரும் ஒரு ஸ்டார்ட்அப்பின் பயணத்தில் முக்கியமான விஷயம், எந்த இடத்தில் லாபத்தோடு வெளிவர வேண்டும் என்பதில் ஒரு தெளிவு இருக்கவேண்டும். பெரும்பாலும் அந்தப் பொறுப்பை முதலீட்டாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். இவர் கதையில் அது தான் நடந்தது. இவரது முதலீட்டாளர்க்கும் மிகப்பெரிய லாபம். 3 மில்லியன் முதலீட்டிற்கு 200 மில்லியன் டாலர் லாபம் அதவும் மூன்றே வருடத்தில் என்றால் சும்மாவா? ரஜினி படத்தில் கூட கிடைக்காத Return on investment சதவிகிதம் அது.

இதோடு இவரது வெற்றிக்கதை முடியவில்லை. இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து இவர் தொடங்கிய எல்லா ஸ்டார்ட்அப் முயற்சிகளும் காலத்தை தாண்டிய முற்றிலும் புதியவை. அவற்றை பேச இன்னுமொரு அத்தியாயம் எடுத்துக்கொள்வோம். ஐந்து ஸ்டார்ட்அப் தொடங்கி பில்லியன் டாலர் கம்பெனிகளாக வளர்த்தெடுத்த கதையை சொல்ல குறைந்தது இரண்டு அத்தியாயங்களாவது வேண்டாமா? அவை அத்தனையிலும் எண்ணற்ற ஸ்டார்ட்அப் பாடங்கள் உண்டு. கற்போம் புதிய உலகத்தை.

ஒரு ஐடியா பிறக்க அடிப்படை, நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வது. தனக்கு  வேண்டியதை தான் படிப்பேன், தெரிந்துகொள்வேன், வேலை செய்வேன் என்று எண்ணுபவர்களுக்கு நல்ல ஐடியா கிடைப்பதில்லை. எப்போதோ படித்த விஷயம் ஒருநாள் நீங்கள் காணும் பிரச்னைக்கு தீர்வை கொடுக்கலாம் அல்லது புதிய விஷயத்திற்கு அடிகோலாக இருக்கலாம். வாசிப்பு என்பது ஐடியா மட்டும் கொடுக்காது. எந்த நிலையிலும் நம்பிக்கையை இழக்காமல் தாங்கிப் பிடிக்கும். சபீர்பாட்டியா தனது முதல் ஸ்டார்ட்-அப்பிற்கு பிறகு தேங்கியதற்கும் அடிப்படை காரணம் வாசிப்பு இல்லாததே. அதேநேரம் எலன் மஸ்க் அடுத்தடுத்து ஸ்டார்ட்-அப்புகளை தொடங்கி வெற்றி நடை போடுவதற்கு முக்கிய காரணம் சிறுவயது வாசிப்பு தான்.

வரி கணக்கு தாக்கல் : பான் கார்ட், ஆதார் கார்ட் பெயர் வேறு வேறாக இருந்தால் என்ன தீர்வு?

வரி கணக்கு தாக்கல் : பான் கார்ட், ஆதார் கார்ட் பெயர் வேறு வேறாக இருந்தால் என்ன தீர்வு?




வரி கணக்கு தாக்கல் : பான் கார்ட்,  ஆதார் கார்ட் பெயர் வேறு வேறாக இருந்தால் என்ன தீர்வு?

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா திருத்தத்தின்படி, வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது.  மேலும், வருமான வரி நிரந்தர கணக்கு பான் உடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைக்க முயலும்போது,  அதிகம் பேருக்கு சிக்கல் ஏற்பட்டது.

காரணம், பான் எண் தொடர்பான ஆவணங்களில், எல்லோரது பெயரிலும் தந்தை பெயரும் சேர்க்கப்பட்டு இருக்கும். ஆனால், ஆதார் எண் ஆவணங்களில், தந்தை பெயரின்  முதல் எழுத்து (இன்ஷியல்) மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த முரண்பாடுகளால், இணைக்க முடியவில்லை.

இதற்கு வருமான வரித்துறை தீர்வு  அறிவித்து உள்ளது.
ஆதார் இணையதளத்தில் சென்று (
https://uidai.gov.in/
), பெயர் மாற்றத்துக்கான கோரிக்கை விடுத்து, அதற்கு ஆதாரமாக பான் கார்டின் ஸ்கேன் காப்பியை  அப்லோட் செய்ய வேண்டும். இதன்மூலம், ஒரே மாதிரியான பெயர் கிடைப்பதால், அதை பான் எண்ணுடன் இணைக்க முடியும் என்று வருமான வரி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில பெண்கள் திருமணத்துக்கு பிறகு கணவர் பெயரை சேர்த்திருப்பார்கள். அவர்களுக்காக, அவர்கள் ஆதார் எண்ணுக்கு பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டை(ஓ.டி.பி.) வருமான வரித்துறை அனுப்பும். அப்போது, பான், ஆதார் என இரு ஆவணங்களிலும் அவர்களின் பிறந்த ஆண்டு ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று வருமான வரித்துறை சரி பார்க்கும். அந்த ஓ.டி.பி -ஐ பயன்படுத்தி, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் எண் செல்லாது என்கிற நிலை உருவாகி இருக்கிறது. மாதத் சம்பளக்காரர்கள் ஜூலை 31 ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தக்கல் செய்ய வேண்டும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். (
https://incometaxindiaefiling.gov.in
/) இதனை ஜூலை 1 ம் தேதிக்குள் மேற்கொள்ள சொல்லப்பட்டுள்ளது. இது வரைக்கும் ஏப்ரல் 10, 2016 வரைக்கும் 1,08,30,265 பேர்  பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்கிறார்கள். 

ஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு - 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும்

ஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு - 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி  பணம் செய்ய இயலும்





உங்கள் முதலீடு ரூபாய் பன்னிரண்டாம் ஆயிரம் ஐந்நூறு (RS.12500)இருந்தாலே

பன்னிரண்டு(12 Years வருடத்தில் நீங்கள் 5 கோடி  பணம் செய்ய இயலும்

 *நீங்கள் 5 கோடி  பணம் செய்ய இயலும்
* நேர்மையான வழியிலேயே
* பொறுமையாக பன்னிரண்டு வருடங்களில்

அதற்கு ஒவ்வொரு வருடமும் உங்களது முதலீடு இருமடங்காக வேண்டும்

! நீங்கள் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள்

ஒவ்வொரு வருடமும் உங்கள் பணம் இரட்டிப்பு ஆகினால் பன்னிரண்டு வருடங்களில் நீங்கள் 5 கோடி  பணம் செய்ய இயலும்


ஆனால்

நீங்கள் தேர்வு செய்யும் துறையில் கவனமும், கொஞ்சம் அறிவும் இருத்தல் நலம்!

12,000 உங்கள் முதலீடு
25,000 முதல் ஆண்டு
50,000 இரண்டாம் ஆண்டு
1,00,000 மூன்றாம் ஆண்டு
2,00,000 நான்காம் ஆண்டு
4,00,000 ஐந்தாம் ஆண்டு
8,00,000 ஆறாம் ஆண்டு
16,00,000 ஏழாம் ஆண்டு
32,00,000 எட்டாம் ஆண்டு
64,00,000  ஒன்பதாம் ஆண்டு
1,28,00,000 பத்தாம் ஆண்டு
2,56,00,000 பதினோராம் ஆண்டு
5,12,00,000 பன்னிரண்டு ஆண்டு


12 ஆண்டுகளில் 5 கோடி பன்னிரண்டு லட்சம் உங்கள் கையில்!

உங்களது முதலீடு ஒவ்வொரு 12500  இருமடங்காக வேண்டும் அதனால்

எளிதாக கணக்கீட்டு முறை

வருடாந்திர 12500 வருமானம் தேவைப்படுகிறது
மாதம் 1042 வருமானம் தேவைப்படுகிறது
வாராந்திர 260 வருமானம் தேவைப்படுகிறது
ஒரு நாள் 52 வருமானம் தேவைப்படுகிறது

* எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் எனினும்
*  சிறந்த தேர்வைத் தேர்வுசெய்யவும்
* முதலீடு செய்வதற்கு முன் இது சாத்தியமா? சரிபார்க்கவும்
*  ஒவ்வொரு வருடமும் உங்களது முதலீடு இருமடங்காக வேண்டும்

மற்ற முதலீட்டு பங்கு சந்தை வர்த்தகத்துடன் சோதித்த பின்னர், பங்கு சந்தை வர்த்தகத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்
இது எங்கள் கருத்து, இது மற்றவர்கள் முதலீட்டு பாணியின் படி மாறுபடலாம்

வாரத்தில் ஐந்து பங்கு வர்த்தகம் நடக்கும்,
ஒரு நாள் 52 வருமானம் தேவைப்படுகிறது அல்லது
வாராந்திர 260 வருமானம் தேவைப்படுகிறது அல்லது
மாதம் 1042 வருமானம் தேவைப்படுகிறது

நீங்கள் ஒவ்வொரு வருடமும் பங்கு அளவு( Quantity or lot Size) மாற்றத்தை வைத்திருக்க வேண்டும்
வளர்ச்சி மற்றும் மதிப்பீட்டு இலக்கை அடைய ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டு அளவு மாற்ற வேண்டும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்

1.  பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

2.  உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்யவும்

3. பகுதி பகுதியாக முதலீடு செயவும்

4. ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்யவும்

5. வாங்குதல் /விற்றல் எதுவாக இருந்தாலும் முடிவு          
    நம்முடையதாகஇருக்கவேண்டும்

6. லாபமோ / நட்டமோ அதற்கு இலக்கு வைக்கவேண்டும்


* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!

* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி?

*********************************************************************************

இலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்
பங்கு சந்தை பயிற்சி வகுப்புகள்  - சென்னை
இலவச முதலீட்டு ஆலோசனைகள்


ருபீடெஸ்க் கன்சல்டன்சி


வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி? - Share Market Training

வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி? - Share Market Training

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!

* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி?

*********************************************************************************

இலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்
பங்கு சந்தை பயிற்சி வகுப்புகள்  - சென்னை
இலவச முதலீட்டு ஆலோசனைகள்


ருபீடெஸ்க் கன்சல்டன்சி


91-9094047040 / 044-24333577